2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

உடல்நலம்


இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். சரியான மருந்து, ஆலோசனை, ஆன்மிக வழிகாட்டுதல் மற்றும் சோதிடம் போன்றவற்றால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். உங்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும். சரியான சிகிச்சைப் பெற்று நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். நீங்கள் புகை மற்றும் மது போன்றவற்றிற்கு அடிமையாகி இருந்தால், அதில் இருந்து இப்போது வெளியில் வருவீர்கள்.
உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு வரும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு கிடைக்கும் முன்னேற்றத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிக்கத் தொடங்கியதும் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். இதனால் உங்கள் குடும்பத்தினர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகரிக்கலாம். செப்டம்பர் 4, 2023 முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால், நவம்பர் 4, 2023 க்கு பிறகு உங்களுக்கு மற்றுமொரு சோதனைக் காலம் தொடங்கலாம். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக உணருவீர்கள்.


Prev Topic

Next Topic