![]() | 2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2023 புத்தாண்டு பலன்கள் – கடக ராசி (Cancer Moon Sign)!
இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். உங்களுக்கு இருக்கும் மனக் கவலை, பதற்றம் மற்றும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அதிகம் உணருவீர்கள். உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உடல்நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை நீங்கள் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், நவம்பர் 4, 2023 முதல் நீங்கள் மீண்டும் மற்றுமொரு சோதனை காலத்தில் இருப்பீர்கள். மொத்தத்தில் ஏப்ரல் 21, 2023 க்கு முன் வரை உங்களுக்கு இருக்கும் நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic