![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 கடுமையான சோதனை காலம் (35 / 100)
சனி பகவான் ஏற்கனவே உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தடைகள் ஏற்படலாம். இப்போது குருவும் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் ராகு மற்றும் கேதுவிடம் இருந்தும் உங்களால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. அஷ்டம சனியின் உண்மையான தாக்கத்தை இந்த பாகத்தில் உணருவீர்கள்.
உங்கள் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் பெற்றோர்களின் உடல்நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை பாதிக்கலாம். நீங்கள் இதனால் தூக்கம் இல்லாத பல இரவுகளை கடக்க நேரலாம். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த முன்பே திட்டமிட்டிருந்தால், அது உங்கள் கட்டுப்பாடின்றி இரத்தாகலாம். மாணவர்கள் சவால் நிறைந்த நேரத்தை சந்திப்பார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் ஏற்படும் அழுத்தம் மற்றும் தங்களுக்கு எதிரான அரசியலால் பாதிக்கப்படுவார்கள். உங்கள் பதவி உயர்வு சார்ந்த விடயங்களில் தாமதங்கள் ஏற்படலாம். மேலும், உங்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் ஊழியர்கள் உங்களை விட உயர் நிலைக்கு பதவி உயர்வு பெறலாம். இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் நீங்கள் அவமானப்படும் சூழலும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்கள் செலவுகளை சமாளிக்க நீங்கள் அதிக கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்க வேண்டும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரலாம்.
Prev Topic
Next Topic