![]() | 2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரைவான வளர்ச்சியையும் வெற்றியையும் பெறுவீர்கள். நீங்கள் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்ப்பீர்கள். உங்களுக்கு அடுத்த நிலைக்குச் செல்ல எளிதாகவே வாய்ப்பு கிடைக்கும். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளம் மற்றும் பதவியுடன் நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு நீங்கள் இடமாற்றம் செய்யவும் இது நல்ல நேரம். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், பெப்ரவரி 2023 வாக்கில் உங்களுக்கு அது கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய இடத்தில் இடமாற்றம் மற்றும் குடியேற்ற பலன்கள் போன்றவற்றை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள்.
ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு உங்களுக்கு இருக்கும் நேரம் அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதால் கடுமையான சோதனை காலமாக இருக்கும். குரு மற்றும் ராகு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு உங்களுக்கு ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ஏற்படுத்துவார்கள். இதனால் நீங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இழக்க நேரலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து இறங்கவும் வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை உங்களுக்கு இருக்கும் பிரச்சணைகளின் தாக்கம் சற்று குறையும்.
Prev Topic
Next Topic