![]() | 2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு |
வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்பு
தொழில்முனைவோர்கள் திடீர் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். குருவிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த நிவாரணம் இப்போது முடிவுக்கு வரும். குரு, ராகு, சனி பகவான் மற்றும் கேது ஏப்ரல் 21, 2023 வரை சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் உங்கள் மறைமுக எதிரிகள் செய்யும் சதிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக ஏமாற்றப்படலாம்.
உங்கள் வணிக பங்குதாரருடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் சந்தைப்படுத்தல் செலவுகள் வீணாக போகலாம். உங்கள் வணிகம் அரசியின் கொள்கைகளால் பாதிக்கப்படலாம். ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த ஒரு லாபமும் இல்லாமல் கடினமான நேரத்தை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் ப்ரோஜெக்ட்டுகள் மற்றும் முதலீடு சொத்துக்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் பெப்ரவரி 2023 க்கு பிறகு சற்று குறையத் தொடங்கும். நீங்கள் புதிய முதலீடுகள் செய்ய முயற்சி செய்கின்றீர்கள் என்றால், அதனை ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் செய்யலாம். நீங்கள் எதை செய்தாலும் அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது. நிதி சார்ந்த புதிய முடிவுகள் எடுக்கும் விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை நீங்கள் மிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். நவம்பர் 4, 2023 க்கு மேல் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்த்துவிடுங்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic