![]() | 2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். எனவே நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பதின் மேல் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏப்ரல் 21, 2023 வரை பிரச்சனைகள் உங்கள் கட்டுபாட்டை மீறி இருக்கலாம். பயணம் அல்லது உத்தியோக இடமாற்றம் காரணமாக நீங்கள் தற்காலிகமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய நேரலாம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடுமையான நேரத்தை ஏற்படுத்துவார்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் உங்களுக்கு அதிக சவால்கள் ஏற்படலாம்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் மன ரீதியாக பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் சட்டம் சார்ந்த விடயங்களில் நீங்கள் எதிர்ப் பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். குறிப்பாக குழந்தை காவல், விவாகரத்து, ஜீவனாம்சம் அல்லது வேறு சில வழக்குகளில் வரும் தீர்ப்பு உங்கள் மன நிம்மதியை பாதிக்கும்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சுப நிகழ்ச்சிய்கள் நிகழ்த்த திட்டமிடலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic