2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

நிதி / பணம்


ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 1 ஆம் வீட்டிலும் மற்றும் குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். பயணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக நீங்கள் அதிக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். நீங்கள் உங்களுக்கு இருக்கும் நிதி தேவைகளுக்காக பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெறலாம். உங்கள் வீட்டுக் கடனை நிதி மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியாமல் போகலாம்.
யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதை தவிர்த்து விடுங்கள், மேலும் கடன் வாங்குவதையும் தவிர்த்துவிடுங்கள். கட்டுமான வேலை சார்ந்த விடயங்களில் தாமதங்கள் ஏற்படலாம். ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் கட்டுமான நிபுணர் உங்களை ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் அதிக பண இழப்பை சந்திக்க நேரலாம். எனவே ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்ல யோசனையாக இருக்கும். அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம் மற்றும் பிற ஸ்பெகுலேடிவ் சார்ந்த விடயங்களில் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது,


இருப்பினும், ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் அடைந்ததும் குரு மற்றும் ராகு இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு ஏற்கனவே பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். ஏப்ரல் 21, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களால் உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகளை சமாளித்து விட முடியும். சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இருக்கும் செலவுகளை அதிகரிப்பார். ஆனால் குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரித்து சனி பகவானின் பாதகமான தாக்கங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவார். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடைவதாலும் மற்றும் ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதாலும் நீங்கள் நல்ல பலன்களைப் பார்ப்பீர்கள்.


Prev Topic

Next Topic