![]() | 2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
காதலர்களுக்கு இந்த புத்தாண்டு சிறப்பான ஒன்றாக இல்லாமல் போகலாம். ஜென்ம சனியின் பாதகமான தாக்கம் அதிகம் உணரப்படும். உங்களுக்கு நீங்கள் காதலிப்பவருக்கும் இடையே வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 21, 2023 வாக்கில் நீங்கள் பிரியவும் நேரலாம் என்பதால் இது உங்கள் மன நிம்மதியை அதிகம் பாதித்துவிடலாம். புதிய உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.
திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சி குறைந்து காணப்படுவார்கள். நீங்கள் IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், மே 2023 முதல் வாரம் வரை காத்திருந்து அதன் பின்னர் திருமண முயற்சிகளை எடுக்கலாம். ஏப்ரல் 21. 2023 க்கு பிறகு குரு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரை குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். மொத்தத்தில் ஏப்ரல் 21, 2023 முதல் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சில முன்னேற்றத்தை உங்கள் காதல் வாழ்க்கையில் காணத் தொடங்குவீர்கள்.
Prev Topic
Next Topic