![]() | 2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2023 புத்தாண்டு பலன்கள் – மகர ராசி (Capricorn Moon Sign)
இந்த புத்தாண்டு உங்களுக்கு மன உளைச்சலுடன் தொடங்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு மிக மோசமான பாகத்தில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வலியைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று கூறலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எந்த ஒரு நிவாரணமும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை பாதிக்கலாம். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீங்கள் முன்பே உங்கள் உத்தியோகத்தை இழந்திருக்கலாம் அல்லது இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் ஜனவரி 16, 2023 அன்று உங்கள் ஜென்ம ராசியில் இருந்து விலகுகிறார் என்பது தான். இதனால் ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து ஓரளவு நல்ல சூழல் உண்டாகும். ஆனால் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் இன்னமும் கடுமையான சோதனை காலத்தில் தான் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குரு உங்கள் ராசயின் 4 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை உங்களுக்கு ஓரளவு நல்ல நிவாரணம் கிடைக்கும். இதனால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்கள் அலுவலகத்திலும் நல்ல முன்னேற்றத்தைப் பெறத் தொடங்குவீர்கள். ஆனால் உங்கள் நிதி நிலையில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எந்த முதலீடுகளும் செய்வதை தவிர்த்துவிடுங்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓரளவு முன்னேற்றம் பெறத் தொடங்குவீர்கள்.
Prev Topic
Next Topic