2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை சற்று நிவாரணம் (35 / 100)


வாழ்த்துகள்! நீங்கள் ஜென்ம சனி பாகத்தை முடித்து விட்டீர்கள். மார்ச் 28, 2025 வரை நீங்கள் ஏழரை சனி காலத்தில் கடைசி பாகத்தில் இருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கம் ஜென்ம சனியின் தாக்கத்தை விட குறைவாகவே இருக்கும். ஆனால் குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் மற்றும் ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இந்த பாகத்தில் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம்.
உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சைப் பெற்று நீங்கள் குணமடைவீர்கள். ஆனால், உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் எந்த நல்ல மாற்றத்தையும் காண முடியாது. திருமணம் ஆனவர்கள் கடுமையான காலகட்டத்தை சந்திப்பார்கள். காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட நினைக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு செய்யப்பட்ட திருமண நிச்சயமும் இரத்தாக வாய்ப்பு உள்ளது.


நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்து இருந்தால், தற்காலிகமாக உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்களுக்கு இதனால் கிடைக்கும் சம்பளம் முன்பு கிடைத்ததை விட குறைவாக இருக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக அதனை தற்காலிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் இருப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை முடிக்க நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டும். உங்களால் அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் கடன்களில் இருந்து வெளிவருவது என்பது உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், வட்டி விகிதம் தான். நீங்கள் அசலை விட வட்டிக்கே அதிக பணத்தை செலுத்துவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ரிஸ்க் உள்ள முதலீடுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.


Prev Topic

Next Topic