![]() | 2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்கள் குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்த்தில் கடுமையான வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படலாம். உங்கள் கோபம் அதிகரிக்கும். நீங்கள் அதிகம் பேசுவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். பயணம் அல்லது உங்கள் உத்தியோகம் சார்ந்த இடமாற்றம் போன்ற காரணத்தால் நீங்கள் தற்காலிகமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய நேரலாம்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடினமான நேரத்தை உருவாக்குவார்கள். சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் உங்களுக்கு அதிக சவால்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஜனவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் அவமானப்படும் சூழல் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் சட்டம் சார்ந்த விடயங்களில் இழக்க நேரலாம். குழந்தை காவல், விவாகரத்து, ஜீவனாம்சம் அல்லது வேறு விதமான வழக்குகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு உங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவது தான். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்து விடுவீர்கள். மேலும் நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கவும் முயற்சி செய்யலாம். புது வீட்டிற்கு குடி பெயரவும் இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களால் எந்த நல்ல பலனையும் எதிர்பார்க்க முடியாது. குரு வக்கிர கதி அடைவதாலும், ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதமற்று இருப்பதாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் பொறுமையாக இருந்து இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic