2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

நவம்பர் 04, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நிதி நிலையில் பின்னடைவுகள் (45 / 100)


இந்த பாகத்தில் ராகு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் கேது உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். குரு வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரித்தாலும், சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடையும் நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில் ராகு மற்றும் குரு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்பதால் உங்கள் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
உங்கள் அலுவலகத்தில் அரசியல் ஏற்படலாம். ஆனால், உங்களால் இந்த பாகத்தில் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளித்து நல்ல செயல்திறனுடன் அலுவலகத்தில் செயல்பட முடியும். ஜனவரி 2024 இன் தொடக்கத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தால் நீங்கள் ஜனவரி 1, 2024 வரை காத்திருந்து அதன் பின்னர் சுப காரியங்களை நிகழ்த்த முயற்சிக்கலாம். புதிய முதலீடுகள் செய்யவும் இது ஏற்ற நேரம் இல்லை. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம். புது வீடு வாங்கி குடி பெயர முயற்சிப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic