![]() | 2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
ஜனவரி 17, 2023 முதல் சனி பகவான், குரு மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் பயண செலவுகள் ஏற்படலாம். இது உங்கள் சேமிப்பை பாதிக்கலாம். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்பதல் பெறலாம். உங்கள் வீட்டுக் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்யும் விடயத்தில் நீங்கள் வெற்றிப் பெற முடியாமல் போகலாம்.
புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் கட்டிடம் கட்டுமான பணிகள் தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் கட்டுமான நிபுணர் அக்டோபர் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு கடினமான நேரத்தை ஏற்படுத்தலாம். இதனால் உங்களுக்கு பெரும் அளவிலான பண இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்தும் விலகி இருப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகள் குறையும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டம் கிடைக்கும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு வரும். நீங்கள் உங்கள் கடன்களை திருப்பி செலுத்திவிடுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். ஆனால் மீண்டும் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டம் உங்கள் நிதி நிலை வளர்ச்சிக்கு ஏற்ற காலமாக இருக்காது.
Prev Topic
Next Topic