![]() | 2023 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஜனவரி 17, 2023 வரை மிகவும் மோசமான பாகம் (20 / 100)
எதிர்பாராவிதமாக, இது உங்களுக்கு மிகவும் கடுமையான சோதனை காலமாக இருக்கும். இது இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குறுகிய காலமாக இருக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் வங்கிக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். உங்கள் நிதி நிலை சார்ந்த விடயங்களுக்கு இது மிகவும் சவால் நிறைந்த காலமாக இருக்கும்/ மேலும் உங்களது பலவீனமான சூழ்நிலையால் நீங்கள் அவமானப்படும் சூழலும் உங்களுக்கு ஏற்படலாம்.
நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால், அது உங்கள் கட்டுப்பாடு இன்றி இரத்தாகலாம் அல்லது தள்ளிப்போடப்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை ஏற்படுத்துவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் வேலை பளு மற்றும் உங்களுக்கு எதிரான அரசியலை உங்களால் சமாளிக்க முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிடவும் நினைக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், எந்த பலனும் இன்றி நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் தாமதமாகலாம். இடமாற்றம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை இழக்க நேரலாம்.
Prev Topic
Next Topic