![]() | 2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை கலந்த பலன்கள் (45 / 100)
இந்த பாகத்தில் குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த நிலையிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார்கள். ராகு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ஆனால், கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்ஹ்டலாம். இதனால் நீங்கள் இந்த பாகத்தில் கலந்த பலன்களைப் பெறுவீர்கள்.
உங்கள் நிதி நிலையை பாதிக்கும் வகையில் உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீங்கள் பண விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் இந்த பாகத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் நிதி பிரச்சனைகளால் உங்களால் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு அதிக வேலை அழுத்தம் ஏற்படும். உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம்.
இந்த பாகத்தில் சுப காரியங்கள் நிகழ்த்த முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பான வங்கி சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான நேரம் இது. பங்குச்சந்தை வர்தகத்தம் மற்றும் ரிஸ்க் உள்ள வர்த்தகம் போன்றவற்றில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டிய நேரம் இது.
Prev Topic
Next Topic