![]() | 2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
ஜனவரி 202௦ முதல் நீங்கள் அஷ்டம சனி காலத்தில் இருந்திருப்பீர்கள். எதிர்பாராவிதமாக, இந்த ஆண்டின் தொடக்கம் உங்கள் வாழ்க்கையில் ஒரு வலி மிகுந்த காலமாக இருக்கலாம். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பயத்தால் நீங்கள் உங்கள் மன நிம்மதியை இழக்க நேரலாம். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், திருமண முயற்சிகளைச் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. எனவே, நீங்கள் ஏப்ரல் 2023 வரை காத்திருந்து அதன் பின்னர் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை நீங்கள் தேடத் தொடங்கலாம். திருமணம் ஆனவர்கள் அனுயுனியம் குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும் என்றால், அதன் பலன் உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். நீங்கள் காதலிப்பவரை விட்டு நீங்கள் பிரிந்து இருந்தால், ஏப்ரல் 21, 2023 க்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து உங்கள் வாழ்க்கைத் தொடர உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர்கள் அதற்கான பாக்கியத்தை இப்போது பெறுவார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைத்து இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திருமணமும் நடக்கும்.
ஆனால் செப்டம்பர் 4, 2023 ஐ நீங்கள் அடைந்ததும், உங்களால் எந்த நல்ல அதிர்ஷ்டத்தையும் இந்த 2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் எதிர்பார்க்க முடியாது. வக்கிர கதி அடைந்த குரு மற்றும் சாதகமற்ற ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கலாம். திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். நீங்கள் பெண்ணாக இருந்து கருவுற்றிருந்தாள், செப்டம்பர் 4, 2023 க்கு மேல் பயணம் செய்வதை தவிர்த்துவிட்டு போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic