![]() | 2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2023 புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி (Gemini Moon Sign).
இந்த ஆண்டு உங்களுக்கு அதிகப்படியான சோதனை காலத்துடன் தொடங்கும். நீங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பல சவால்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரிப்பதால் இந்த புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் மோசமான ஒன்றாக இருக்கலாம். ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் மற்றும் உளவில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஜனவரி 16, 2023 அன்று நீங்கள் அஷ்டம சனி காலத்தில் இருந்து வெளியில் வருகின்றீர்கள் என்பது தான்.
ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனியாகளின் தாக்கம் குறையும். உங்களுக்கு இருக்கும் பிரச்சணைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்ய உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிதமான வளர்ச்சியைக் காணத் தொடங்குவீர்கள். குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தவும் இது நல்ல நேரம்.
குரு வக்கிர கதி அடைவதால், நீங்கள் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு வருவதால் உங்களுக்கு நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic