2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நல்ல முன்னேற்றம் (55 / 100)


மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் உங்களது மிகவும் மோசமான அஷ்டம சனி காலத்தை கடந்து விட்டீர்கள். இப்போது சனி பகவான் மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரித்து குருவால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை குறைக்க உதவுவார்கள். நீங்கள் கடந்த மாதங்களை விட இந்த மாதம் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.
உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். உங்களுக்கு கடந்த மாதங்களில் ஏற்பட்ட துன்பங்களில் இருந்து இப்போது வெளியில் வருவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்களது வேலை பளுவும் பதற்றமும் மிதமாகவே இருக்கும். ஆனால் அதனையும் இந்த பாகத்தில் நீங்கள் எளிதாக சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், உங்கள் உத்தியோகம் பாதுகாப்பான நிலையிலேயே இருக்கும்.


உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன்கள் நல்ல வட்டி விகிதத்தில் ஒப்புதல் பெரும். இருப்பினும், சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், குடியேற்றம் சார்ந்த விடயங்களில் நீங்கள் நல்ல பலனைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விட்டு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.


Prev Topic

Next Topic