![]() | 2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | மூன்றாம் பாகம் |
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் (85 / 100)
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் கும்ப ராசியில் ஜூன் 17, 2023 அன்று வக்கிர கதி அடைவதால், உங்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த பாகத்தில் கேதுவால் எந்த பாதகமான தாக்கங்களும் ஏற்படாது. உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் உடல்நலம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் அவரது உறவினர்களிடம் உங்களுக்கு இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய நல்ல மேலாளர் உங்களுக்கு கிடைப்பார், நீண்ட காலமாக நீங்கள் சம்பள உயர்வுக்கு எதிர்பார்கின்றீர்கள் என்றால், அது இப்போது நடக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றத்தைப் பெற இது நல்ல நேரம். தொழில்முனைவோர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல திருப்பங்களைப் பெறுவார்கள்.
நிதி நிலை இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியில் வந்து விடுவீர்கள். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். பங்குச்சந்தை வர்த்தகம் குறிப்பாக ஜூன் 17, 2023 முதல் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தால் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யவும் இது நல்ல நேரம். முதலீடு செய்ய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic