2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


பங்குசந்தையில் தொழில்முறையில் வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் முதலீடு செய்பவர்கள் வலி மிகுந்த பாகத்தை சந்திப்பார்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் ஆப்சன் பெட்டிங், ப்யுச்சர் அல்லது கம்மாடிட்டீஸ் போன்ற சந்தை வர்த்தகம் உங்களுக்கு குறிப்பாக ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். உங்களது அனைத்து கணிப்புகளும் மற்றும் கணக்குகளும் தவறாகலாம். இதனால் நீங்கள் பணத்தை இழந்து கொண்டே இருப்பீர்கள். எனவே ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது.
நீங்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் ஜனவரி 17, 2023 வரை தவிர்த்துவிடுவது நல்லது. ஏஜெண்டுகள், தனியார் பணம் கடன் தருபவர்கள் மற்றும் வீடு கட்டுமான நிபுணர்கள் போன்றவர்களால் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம. நீங்கள் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால், அது எதிர்பாராத சில நிகழ்வுகளால் நிறுத்தப்படலாம். உங்களிடம் இருக்கும் பணத்தை உங்களால் இந்த ஆண்டு முழுவதும் வைத்திருக்க முடியும் என்றால், அதுவே நீங்கள் செய்யும் பெரிய சாதனையாக உங்களுக்கு இருக்கும்.


ஏப்ரல் 17, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் முதலீடுகளில் இருந்து நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். குரு மற்றும் ராகு இணைந்து ஸ்பெகுலேடிவ் வர்த்தகம், சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.


Prev Topic

Next Topic