![]() | 2023 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
முடிந்த வரை ஏப்ரல் 16, 2023 வரை நீங்கள் தொலைதூர பயணம் செய்வதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை முற்றிலுமாக குறைத்துவிடுவார்கள. கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக தனிமையையும் ஏமாற்றங்களையும் வெளிநாட்டில் சந்திக்க நேரலாம். உங்களுக்கு செல்லும் இடத்தில் சரியான தங்கும் வசதிகள் கிடைக்காமல் போகலாம். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு ஏமாற்றத்தில் முடியலாம்.
புது கார் வாங்குவதை தற்போது தவிர்த்துவிடுங்கள். மேலும் பெப்ரவரி 28, 2023 வரை வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த பலன்கள் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெறாமல் போகலாம். விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் H1B புதுபித்தல் பெட்டிசன் RFE இடம் செல்லலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மார்ச் 2023 க்கு முன் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம்.
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் சஞ்சரிக்கும் போது நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். மேலும் விசா சார்ந்த விடயங்கள் மற்றும் குடியேற்றம் போன்ற விடயங்களில் இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். விசா ஸ்டாம்பிங் செய்ய நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு பயணம் செய்ய முயற்சிக்கலாம். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கலந்த பலனைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic