![]() | 2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தை மிகவும் மோசமான ஒன்றாக மாற்றலாம். அலுவலகத்தில் நடக்கும் அரசியல், வேலை பளு மற்றும் பதற்றம் போன்ற கானங்களால் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் உயர் மேலாளர் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார். மேலும் நீங்கள் ரிப்போர்ட் செய்யும் மேலாளார் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்கள் நேரடி ரிப்போர்ட்டில் எந்த நல்ல பின்னூட்டத்தையும் உங்களால் பெற முடியாமல் போகலாம்.
ப்ராஜெக்ட் தோல்வி அடைந்ததற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஜனவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்கின்றீர்கள் என்றால், உங்கள் ஒப்பந்தம் புதுபிக்கப்படாமல் போகலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரமாக இல்லாமல் போகலாம். நீங்கள் வெளிநாடிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ பெயருவதை தவிர்க்க வேண்டும். இடமாற்றம், அல்லது குடியேற்றம் போன்ற எந்த பலனையும் உங்கள் நிறுவனத்தில் இருந்து உங்களால் எதிர்பார்க்க முடியாது.
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் ஏப்ரல் 21, 2023 க்கு மேல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கும். நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், நீங்கள் புது வேலைக்கு முயற்சிக்கலாம். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான சம்பளம் மற்றும் பதவியுடன் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களுடன் உங்களுக்கு இருக்கும் நட்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பின்னடைவுகளை சந்திக்கக் நேரலாம்.
Prev Topic
Next Topic