2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பொது பலன்கள். இந்த உலகத்தின் அனேக பகுதிகளுக்கு இந்த ஆண்டு அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கின்றது. ஆனால் பசிபிக் நேர மண்டலப் பகுதிகளுக்கு பரணி நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கின்றது. மகர ராசியில் உச்ச நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனி பகவான் ஜனவரி 16, 2023 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். மீன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு ஏப்ரல் 21, 2023அன்று மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் ரிஷப ராசியில் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார். இந்த ஆண்டின் தொடக்கம் இந்த உலக மக்களுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த ஆண்டின் முதல் ஒரு சில மாதங்கள் பொருளாதார நிலைகளால் சற்று பிரச்சனைக்குரிய காலமாக இருக்கலாம். குரு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனதும் விடயங்கள் அமைதியான நிலைக்கு மாறும்.
ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் நவம்பர் 1, 2023 அன்று பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு, கேது, குரு மற்றும் சனி பகவான் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களும் இந்த ஆண்டு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை மாறுவதைக் காண்பது சற்று சுவாரசியமான விடயமாக இருக்கும். இது இந்த உலக மக்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

இந்த ஆண்டிற்கான பலன்களை நான் 5 பாகங்களாக பிரித்துள்ளேன்.

பாகம் 1: ஜனவரி ௦1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரி – சனி பெயர்ச்சி
பாகம் 2: ஜனவரி 16, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை – குரு பெயர்ச்சி
பாகம் 3: ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை – சனி பகவான் ஜூன் 17, 2023 அன்று வக்கிர கதி அடைகிறார்
பாகம் 4: செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 14, 2023 வரை – குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பார்கள்
பாகம் 5: நவம்பர் 04, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை – குரு வக்கிர கதி அடைந்த நிலையிலும் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்த நிலையிலும் சஞ்சரிப்பார்கள்



Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.