2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்



எதிர்பாராவிதமாக, இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் குடும்ப சூழலில் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரலாம். உங்கள் குழந்தைகள், வாழ்க்கைத்துணை, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.


ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள உங்கள் மன நிம்மதியை இழக்க நேரலாம். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம் இல்லை. இந்த பாக காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தினர்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு குழந்தை காவல், விவாகரத்து அல்லது சொத்துக்கள் சார்ந்த விடயங்களில் சிக்கல்கள் இருந்தால், விடயங்கள் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழல் உங்களுக்கு மனக் கவலையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம்.

ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் கடந்ததும், உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் விடயங்களில் பெரும் அளவு மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலட்டம் வரை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரமாக இருக்கும். புது வீட்டிற்கு குடி பெயரும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள்.



செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம்/ வக்கிர கதி அடைந்த குருவும் மற்றும் சாதகமற்ற ராகு / கேது பெயர்ச்சியும் உங்களுக்கு இருக்கும் மன நிம்மதியை பாதிக்கக்கூடும். நீங்கள் இந்த காலகட்டத்தில் எதை செய்ய வேண்டுமானாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும்.

Prev Topic

Next Topic