![]() | 2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 04, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உடல்நல பிரச்சனைகள் மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்சனைகள் (40 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல்நலத்தை இந்த பாகத்தில் மிகவும் மோசமாக பாதிப்பார். உங்கள் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற கருத்துவேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் இந்த பாகத்தில் மிகவும் பொறுமையாக இருந்து சுமூகமாக கடக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
குரு பெயர்ச்சி நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக இருப்பதால், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் அழுத்தம் இருந்தாலும், உங்களால் அதனை சமாளித்துவிட முடியும். டிசம்பர் 2023 அல்லது 2024 இன் தொடக்கத்தில் உங்களுக்கு அடுத்த நிலைக்கு செல்ல பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில்முனைவோர்கள் சுமாரான வளர்ச்சியைக் காண்பார்கள். உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் சொத்துக்களில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு நீங்கள் விலகி இருக்க வேண்டும். அது உங்களுக்கு அதிக பண இழப்பை ஏற்படுத்திவிடலாம். 2024 இன் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதால் நீங்கள் முதலீடுகள் செய்ய முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic