2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

உடல்நலம்



வரும் நாட்களில் உங்கள் உடல்நலத்தின் மீது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிற்கு ஜனவரி 16, 2023 அன்று பெயர்ச்சியாவதால் உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். உங்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் இரத்த கொதிப்பு, சர்க்கரையின் அளவு மற்றும் கொழுப்பு சத்தின் அளவை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்களுக்கு இருக்கும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு மனக் கவலை, தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகலாம். என்ன நடகின்றது என்பதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். நீங்கள் அதிக தனிமையை உணரலாம், இதனால் உங்கள் மன நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் கட்டுப்பாடின்றி சூதாட்டத்தில் ஈடுபட நேரலாம். தேவைப்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவ உதவியை எடுத்துக் கொள்ள வேண்டும்.



ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்களில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால், உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வந்து பெரும் அளவு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் உடலில் இருக்கும் இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு வரும். செப்டம்பர் 4, 2023 க்கு மேல் இந்த ஆண்டின் இறுதி வரை நீங்கள் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.



Prev Topic

Next Topic