2023 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரொஜெக்டின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு மிகவும் மோசமான ஒன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் ப்ராஜெக்ட் தோல்வியடையலாம். உங்கள் படம் இந்த காலகட்டத்தில் வெளிவர இருந்தால், அது தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் இரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். உங்களுக்கு பணம் கடன் தந்தவர்கள் அதனைத் திருப்பித் தருமாறு உங்களை பின்தொடருவார்கள்.


நீங்கள் உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களுடன், குறிப்பாக ஊடகங்கள் மற்றும் நேரலையில் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட நேரலாம். இணையதள ட்ரோல் மற்றும் வதந்திகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனைச் சார்ந்தே எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும், செயல்பட வேண்டும்.


ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய படங்களில் இருந்து உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் படம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும். உங்களுக்கு அதிகரிக்கும் இரசிகர்களின் எண்ணிக்கை மற்றும் நிதி வெகுமதிகளால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Prev Topic

Next Topic