2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை மோசமான காலகட்டம் (25 / 100)



அஷ்டம குருவின் உண்மையான தாக்கத்தை இந்த பாகத்தில் நீங்கள் உணருவீர்கள். இந்த காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவார். இது கண்டாக சனி காலமாகும். மேலும் இது இரண்டரை ஆண்டு காலத்திற்கு தொடரும். இந்த பாகத்தில் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கத் தொடங்கும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்தே செயல்பட வேண்டும்.


உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கடுமையான சண்டைகள் மற்றும் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் நீங்கள் தற்காலிகமாக அவர்களை விட்டு பிரியவும் வாய்ப்பு உள்ளது. காதலர்கள் வலி மிகுந்த பாகத்தை கடக்க நேரலாம். உங்களுக்கு இதனால் மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.

உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேரலாம். ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள் அதற்கு நீங்கள் குற்றம்சாட்டப் படுவீர்கள். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மேலும் அலுவலகத்தில் உங்கள் மேலாளார் மற்றும் சக ஊழியர்களால் நீங்கள் பண இன்னல்களை சந்திப்பதோடு நீங்கள் அவமானப்படும் சூழலும் ஏற்படலாம். நீங்கள் மேலும் மோசமான சூழலில் அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடலாம் என்றும் நினைக்கலாம். தொழில்முனைவோர்கள் கடுமையான நிதி இழப்புகளை சந்திப்பார்கள். மேலும் மோசமான சூழலில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் சூழலும் ஏற்படலாம்.



பங்குச்சந்தை வர்த்தகம் அல்லது வேறு எந்த விதமான ரிஸ்க் நிறைந்த நிதி சார்ந்த முடிவுகளும் உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம். நீங்கள் இதனால் ஒரே இரவில் உங்கள வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த செல்வங்களை இழக்க நேரலாம். உங்களுக்கு ஏதேனும் சட்ட பிரச்சனைகள் இருந்தால், அதனால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Prev Topic

Next Topic