2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வேலை / உத்தியோகம்


ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பெரிதாக முன்னேற்றத்தை காண முடியாது. உங்கள் மேலாளரால் நீங்கள் இன்னல்களை சந்திக்க நேரலாம். யாரைப் பற்றியும் புகார் கூறுவதை தவிர்த்துவிடுங்கள், ஏனென்றால், அது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கிவிடலாம். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். உங்கள் மறைமுக எதிரிகளால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 ஆகிய மாதங்களில் நீங்கள் அதிக இன்னல்களை சந்திக்க நேரலாம்.
அலுவலகத்தில் பெண்களிடமும் மற்றும் உங்களை விட வயதில் சிரியவர்களுடனும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு உங்கள் மேலாளரால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் நீங்கள் யாருடனாவது நெருங்கிய நட்புடன் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமான ஒன்றாக மாற்றிவிடலாம். இதனால் நீங்கள் உங்களுக்கு இருக்கும் நற்பெயரை இழக்க நெருவதொடு உங்கள் உத்தியோகத்தையும் இழக்கும் சூழல் ஏற்படலாம். மேலும் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் ராகு மற்றும் கேதுவால் ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறையும்., மேலும் ஏப்ரல் 21, 2023 க்கு மேல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்களும் கிடைக்கத் தொடங்கும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பான வெற்றியையும் நல்ல முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சிக்கவும் இது ஏற்ற காலமாக இருக்கும். உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உத்தியோகத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic