2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள்



தொழில்முனைவோர்கள் சனி பகவான், குரு, மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பார்கள். அர்தஷ்டம சனி நடைபெறுவதால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தை நீங்கள் ஜனவரி 1, 2023 முதல் ஜனவரி 16, 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகம் உணருவீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். குரு உங்களுக்கு நிதி பிரச்சனைகளை ஏற்படுத்துவார். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். உங்கள் வணிக பங்குதாரருடன் நீங்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட நேரலாம். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இது ஏற்ற நேரம் இல்லை.


ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் சந்தைப்படுத்தல் செலவுகள் எந்த பலனும் இன்றி வீணாகலாம். அரசு கொள்கைகளால் உங்கள் வணிகம் பாதிக்கப்படலாம். ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த நிதி பலனும் இன்றி கடினமான நேரத்தை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் ப்ரோஜெக்ட்டுகள் மற்றும் முதலீடுகள் சார்ந்த சொத்துக்களில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் எதை செய்தாலும் அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்தே செயல்பட வேண்டும். உங்கள் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.

ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 7 ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் லாபத்தை அதிகரிக்கும் வகையில் புதுமையான யோசனைகளை செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் வங்கிக் கடன் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். செப்டம்பர் 2023 ஐ அடையும் போது உங்களுக்கு கிடைத்த வளர்ச்சியால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனால் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பதோடு புதிய முதலீடுகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.




Prev Topic

Next Topic