![]() | 2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
ஏப்ரல் 21, 2023 வரை சனி பகவான், குர் மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ மற்றும் பயண செலவுகள் ஏற்படலாம். இது உங்கள் சேமிப்பை பாதிக்கலாம். உங்கள் பண வரத்தும் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன் இரத்தாகலாம் அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெறலாம். உங்களால் உங்கள் வீட்டுக் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்ய முடியாமல் போகலாம்.
புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் கட்டிடம் கட்டும் ப்ரோஜெக்ட்டுகள் தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் கட்டுமான நிபுணர் ஏப்ரல் 21, 2023க்கு முன் உங்களை ஏமாற்றும் வாய்ப்பும் உள்ளது. இதனால் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்தும் நீங்கள் விலகி இருப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். நீங்கள் உங்கள் கடனை அடைத்துவிடுவீர்கள். உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயரவும் இது நல்ல நேரம். மீண்டும் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இருக்கும் காலகட்டத்தில் நீங்கள் சுமாரான பலனையே பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic