2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – துலாம் ராசி (Libra Moon Sign).
இந்த 2023 புத்தாண்டு பல சவால்களுடன் உங்களுக்குத் தொடங்குகிறது. சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரு பாதகமான சஞ்சாரமாக இருக்கும். இருப்பினும், ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை பாதிக்கும். ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் உபாதைகளை உண்டாக்குவார் மேலும் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் இந்த சோதனை காலத்தை கடக்க உங்களுக்கு நல மனோ பலத்தையும் ஆன்மீக ஞானத்தையும் வழங்குவார்.


உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் உத்தியோகத்தை இழந்திருக்கலாம் அல்லது இந்த ஜனவரி 2023 வாக்கில் இழக்கவும் வாய்ப்பு இருக்கலாம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தும். சட்ட சிக்கல்களும் ஆடிட் பிரச்சனைகளும் உங்கள் மன நிம்மதியை பாதிக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு வருவதால் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் விடயங்கள் சற்று நல்ல நிலையில் இருக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கவும் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகவும் முயற்சிக்கலாம். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும் மேலும் நிதி நிலையிலும் வளர்ச்சி உண்டாகும்.


செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. நீங்கள் இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்க்க வேண்டும். அது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.

Prev Topic

Next Topic