2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை உடல்நலம் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் (30 / 100)


உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் அர்தஷ்டம சனி காலத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டீர்கள் என்பது தான். ஆனால் குரு மற்றும் ராகு தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனைகளைத் தருவார்கள். கடந்த மாதங்களை ஒப்பிடும் போது உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்கும்.
உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு நல்ல நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது. திருமணம் ஆனவர்கள் கடினமான நேரத்தை சந்திப்பார்கள். காதலர்கள் பிரிந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் இரத்தாகும் வாய்ப்பும் உள்ளது.


நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், மீண்டும் உங்களுக்கு தற்காலிகமாக ஒரு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு முந்தைய உத்தியோகத்தை விட இந்த உத்தியோகத்தில் சம்பளம் குறைவாக இருக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக தற்காலிகமாக அதனை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதற்காக அதிக நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல உத்தியோகம் இருந்தால் அதனை வைத்து நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். உங்களுக்கு இருக்கும் கடன்களால் நீங்கள் கடினமான நேரத்தை சந்திப்பீர்கள். உங்களுக்கு வட்டி விகிதமே ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். நீங்கள் அசலை விட வட்டிக்கு அதிக பணத்தை செலுத்துவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ரிஸ்க் நிறைந்த முதலீடுகள் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.



Prev Topic

Next Topic