![]() | 2023 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
தொழில்முறையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வலி மிகுந்த பாகத்தை கடப்பார்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் பெட்டிங் ஆப்சன், ப்யுச்சர் அல்லது கம்மாடிட்டீஸ் சந்தையில் குறிப்பாக ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரலாம். உங்களது அனைத்து கணக்குகளும் கணிப்புகளும் மற்றும் ஆய்வுகளும் தவறாகலாம். மேலும் இதனால் நீங்கள் பணத்தை இழக்க நேரலாம். எனவே ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் முற்றிலுமாக பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்ல யோசனையாக இருக்கும்.
நீங்கள் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏப்ரல் 21, 2023 வரை வாங்குவது மற்றும் விற்பது போன்ற இரண்டையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். பண விடயங்களில் நீங்கள் முகவர்கள், தனியார் பணம் கடன் தருபவர்கள் மற்றும் வீட்டு கட்டுமான நிபுணர்களால் ஏமாற்றப்படலாம். நீங்கள் புதிய கட்டிடம் கட்ட இருந்தால், எதிர்பாராத நிகழ்வுகளால் உங்களது கட்டுமான ப்ராஜெக்ட் நிறுத்தப்படலாம். நீங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கான பண இருப்பை உங்களிடம் வைத்திருந்தாலே, அதுவே ஒரு பெரிய சாதனையாக உங்களுக்கு இருக்கும்.
நீங்கள் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல மாற்றங்களை உங்கள் முதலீடுகளில் காண்பீர்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். குரு மற்றும் ராகு இணைந்து அதிர்ஷ்ட்ட சீட்டு, சூதாட்டம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் ஆகியவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
Prev Topic
Next Topic