2023 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் தொலைதூர பயணம் செய்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டு. சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை முற்றிலுமாக குறைத்துவிடுவார்கள். கேது உங்கள் ராசியின் 1 ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் அதிக தனிமையையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துவார். உங்களுக்கு சரியான தங்கும் வசதிகள் கிடைக்காமல் போகலாம். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்.
ஏப்ரல் 21, 2023 வரை புது கார் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் சரியான நேரத்தில் ஒப்புதல் பெறாமல் போகலாம். விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய்நாட்டிற்கு பயணம் செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்கள் H1B புதுபித்தல் பெட்டிசன் RFE இடம் தேக்கம் அடையலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மார்ச் 2023 வாக்கில் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் சூழல் ஏற்படலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடும் போது நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். மேலும் விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த விடயங்களில் இந்த நேரத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். விசா ஸ்டாம்பிங் செய்யவும் நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு பயணம் செய்யலாம். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கலந்த பலனைப் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic