![]() | 2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2023 ஆண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் கேது உங்கள் ஜென்ம ராசியிலும், குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரு பாதகமான சஞ்சாரமாக இருக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை அலுவலகத்தில் நடக்கும் அரசியல், வேலை பளு, மற்றும் பதற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் உயர் நிலை மேலாளர் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார். நீங்கள் ரிப்போர்ட் செய்யும் மேலாளரும் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களது நேரடி ரிப்போர்ட்டுகள் நல்ல மதிப்புகளைப் பெறாமல் போகலாம்.
ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள் அதற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஜனவரி 1, 2023 முதல் பெப்ரவரி 28, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். உங்கள் ஒப்பந்தமும் புதுபிக்கப்படாமல் போகலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வெளிநாட்டிற்கு அல்லது வேறு மாநிலத்திற்கு பெயருவதை தவிர்க்க வேண்டும். இடமாற்றம், அல்லது குடியேற்றம் போன்ற எந்த பலனையும் உங்கள் நிறுவனத்திடம் இருந்து உங்களால் எதிர்பார்க்க முடியாது.
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் இணைந்து சஞ்சரிக்கத் தொடங்கியதும் ஏப்ரல் 21, 2023 க்கு மேல் இருந்து நீங்கள் நல்ல திருப்பத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், நீங்கள் புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கலாம். உங்களுக்கு ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நல்ல வேலை வாய்ப்பு மற்றும் சிறப்பான சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு நல்ல நட்பு உண்டாகும். ஆனால் செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic