![]() | 2023 புத்தாண்டு வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள் |
வணிகம் மற்றும் இரண்டாம் வருமான வாய்ப்புகள்
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் பலம் பெறுவார்கள். ஜென்ம குருவின் உண்மையான தாக்கத்தை ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உணருவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத திடீர் பின்னடைவுகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிரான சதிகளால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நீண்ட கால ப்ரோஜெக்ட்டை இழக்க நேரலாம். உங்கள் காப்புரிமையை நீங்கள் இழக்க நேரலாம். உங்களது புதுமையான யோசனைகள் மற்றும் வர்த்தக இரகசியங்களும் கூட இந்த காலகட்டத்தில் திருடப்படலாம்.
உங்கள் வணிக பங்குதாரர், போட்டியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் உங்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை சமாளிக்க உங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய தேவை ஏற்படலாம் மேலும் நீங்கள் அதிக பணத்தை கடன் வாங்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 வாக்கில் உங்கள் வணிகம் அதிக இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்ப்தன் பலத்தால் நீங்கள் நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல புதிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் வணிக வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். உங்கள் வணிக பங்குதாரருடன் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வைப் பெறுவீர்கள்.
செப்டம்பர் 14 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடைவதாலும் மற்றும் ராகு / கேது பெயர்ச்சி சாதக்மாற்றதாக இருப்பதாலும் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதால் நீங்கள் சற்று நிதாநித்தே செயல்பட வேண்டும்.
Prev Topic
Next Topic