![]() | 2023 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கல்வி |
கல்வி
எதிர்பாராவிதமாக, இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். உங்களுக்கு உங்கள் வீட்டுப்பாடம் முடிப்பதிலும் மற்றும் உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடிப்பதிலும் அதிக அழுத்தம் நிறைந்த சூழல் ஏற்படலாம். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நீங்கள் முதுகலை பட்டம் அல்லது Ph.D பட்டம் படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் பேராசிரியர் மற்றும் உங்கள் கல்லூரி நிறுவனத்துடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் டீன் ஏஜ் நபராக இருந்தால், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 வாக்கில் நீங்கள் சில இன்னல்களை சந்திக்கவும் நேரலாம். நீங்கள் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஏப்ரல் 21, 2023 வரை ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெற்று அதன்படி நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் தவறுகளை உணருவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். நல்ல பள்ளி அல்லது பல்கலைகழகத்தில் சேரவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல நண்பர்களும் உங்களுக்கு கிடைப்பார்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic