2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


எதிர்பாராவிதமாக, இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் குடும்ப சூழலில் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படும். உங்கள் குழந்தைகள், வாழ்க்கைத்துணை, உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கூட உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்துவேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை புரிந்து கொள்ளவும் அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொளவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.
ஆனால், நவம்பர் 24, 2022 இலிருந்து ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் மன நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் குடும்பம் இந்த பாக காலகட்டத்தில் அவமானங்களை சந்திக்க நேரலாம். மேலும் விவாகரத்து, குழந்தை காவல் அல்லது சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளால் உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் விடயங்கள் உங்களுக்கு எதிராகவும் மாறலாம். இத்தகைய சூழல் உங்கள் மன நிம்மதியை பாதித்து உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.


ஏப்ரல் 21, 2023 ஐ நீங்கள் கடந்ததும், உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் விடயங்களில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம். புது வீட்டிற்கு குடி பெயரும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நலல் பெயரையும் புகழையும் பெரும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். வக்கிர கதி அடைந்த குரு மற்றும் சாதகமற்ற ராகு / கேது பெயர்ச்சி உங்கள் மன நிம்மதியை பாதிக்கலாம். நீங்கள் இந்த காலகட்டத்தில் எதைச் செய்தாலும் அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும்.



Prev Topic

Next Topic