![]() | 2023 புத்தாண்டு (ஐந்தாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 04, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை ஆரோக்கியம் மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்சனைகள் (40 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவார். மேலும் உங்களுக்கு உடல்நல பிரச்சனையும் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற சண்டைகள் மற்றும் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பாகத்தை சுமூகமாக கடக்க வேண்டும் என்றால், மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் வளர்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
நீண்ட கால அடிப்படையில் குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் நீங்கள் அலுவலகத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும், உங்களால் அதனை சமாளிக்க முடியும். டிசம்பர் 2023 அல்லது அடுத்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு அடுத்த நிலைக்கு செல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்முனைவோர்கள் சுமாரான வளர்ச்சியை காண்பார்கள். உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும் கூடவே அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு அதிக பண இழப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அதனை விட்டு விலகி இருங்கள். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் முதலீடுகளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic