![]() | 2023 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். பண விடயங்களில் நீங்கள் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்கள் அல்லது நண்பர்களால் ஏமாற்றப்படலாம். இதனால் உங்கள் நிதி சுமை மேலும் அதிகரிக்கும். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதை தவிர்த்து விடுங்கள் மேலும் யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்காதீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வங்கிக் கடன் அல்லது நிதி மறு பரிசீலனை விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறாமல் போகலாம்.
அதிர்ஷ்ட்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. பயணம் செய்யும் போது திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க போதிய காப்பீடு எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை எந்த விதமான ரிஸ்க் எடுப்பதையும் தவிர்த்துவிடுங்கள்.
குரு மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் ஏப்ரல் 21, 2023 முதல் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். உங்கள் வங்கிக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் நண்பர்கள் நீங்கள் உங்களுக்கு இருக்கும் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர உதவி செய்வார்கள். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். புது வீடு வாங்க இது நல்ல நேரம். செப்டம்பர் 2023 ஐ அடையும் போது உங்கள் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உங்களுக்கு இருக்கும் செலவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் புது வீடு வாங்கும் முயற்சியை தவிர்த்துவிடுங்கள்.
Prev Topic
Next Topic