2023 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

செப்டம்பர் 04, 2023 முதல் நவம்பர் 04, 2023 வரை நிதி நிலையில் பிரச்சனைகள் (35 / 100)


குரு மேஷ ராசியில் வக்கிர கதி அடைந்தும் மற்றும் சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர கதி அடைந்தும் இந்த பாகத்தில் சஞ்சரிப்பார்கள். ராகு அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியிலும் மற்றும் கேது சிதிரை நட்சத்திரம் துலாம் ராசியிலும் தங்கள் பெயர்ச்சியின் கடைசி பாகத்தில் இருப்பார்கள். குரு சமீப கடந்த மாதங்களில் உங்களுக்கு ஆதரவு தந்தார். ஆனால் இப்போது இது உங்களுக்கு மற்றுமொரு சோதனை காலமாக இருக்கலாம். குறிப்பாக உங்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
நீங்கள் நல்ல தூக்கத்தை இழக்க நேரலாம். உங்களுக்கு தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இதனால் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் இந்த பாகத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நிதி பிரச்சனையின் காரணமாக உங்களால் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம்.


சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை. வங்கி சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகள் செய்ய வேண்டிய நேரம் இது. பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் ரிஸ்க்கான முதலீடுகளில் இருந்து நீக்னால் விலகி இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic