![]() | 2023 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
வரும் நாட்களில் உங்கள் உடல்நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ராசியின் 12 ஆம் வெட்டில் சனி பெயர்ச்சி ஜனவரி 16, 2023 அன்று நடைபெறுவதால் உங்களுக்கு தூக்கம் பாதிக்கப்படலாம். உங்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு, கொழுப்பு சத்து மற்றும் இரத்த கொதிப்பின் அளவை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல்நலத்தின் மீது கவனம் தேவை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். எனவே போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மனக் கவலை மற்றும் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் புகை, மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதே உங்களுக்கு புரியாமல் இருக்கும். நீங்கள் அதிக தனிமையை உணருவீர்கள் மேலும் உங்கள் மன நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் கட்டுபாடின்றி சூதாட்டத்தில் ஈடுபட நேரலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை விடயங்களில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீடிர்கி பெயர்ச்சி ஆனதும் உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் குணமடைவீர்கள். உங்களுக்கு இருக்கும் கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு வரும். செப்டம்பர் 4, 2023 க்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் நீங்கள் ஆதரவாக உணருவீர்கள்.
Prev Topic
Next Topic