2023 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

வழக்கு


உங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வழக்குகளை இந்த காலகட்டத்தில் தொடருவது நல்ல யோசனையாக இருக்காது. உங்கள் மீது தவறான குற்றம் சாட்டப்படலாம். இதனால் நீங்கள் பாதிப்புகளை சந்திக்க நேரலாம். இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கலாம். ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கும் பாதிக்கப்படலாம்.
மருத்துவ துறையில் இருப்பவர்கள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரலாம். குழந்தை காவல், ஜீவனாம்சம் அல்லது வேறு சில பிரச்சனைகளால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பதால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறையும்.


உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும் என்பது தான். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்து நீங்கள் இந்த காலகட்டத்தில் வெளியில் வருவீர்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். ஆனால் நவம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நீங்கள் மற்றுமொரு சோதனை காலத்தை சந்திப்பீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


Prev Topic

Next Topic