![]() | 2023 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | காதல் |
காதல்
காதலர்கள் இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் பிரிய நேரலாம் மேலும் வலி மிகுந்த அனுபவங்களை அவர்கள் சந்திக்க நேரலாம். உங்கள் சொந்த விடயங்களை யாருடனும் பகிர வேண்டாம். நீங்கள் காதலிப்பவருக்கும் உங்களுக்கும் இடையே மூன்றாவது நபர் வருவதால் உங்கள் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீங்கள் ஒரு தவறான நபரை நோக்கி ஈர்க்கப்படலாம். நீங்கள் உங்கள் காதலை தெரிவிக்க முயற்சி செய்யதால், மிகவும் மோசமாக ஏமாற்றவும்படலாம். உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் பெறுவதில் கடினமான நேரம் நிலவலாம். புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் இருவருக்கும் இடையே புரிதல் குறைவாக இருப்பதால் அதிக சவால்களை சந்திப்பார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. ஏப்ரல் 21, 2023 வரை உங்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் நீடிக்கலாம்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர உதவி செய்வார். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைத்து நீங்கள் செப்டம்பர் 4, 2023 க்கு முன் திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக ரிக்கும். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருக்கும் தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைப்பதற்காக நீங்கள் சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். நீங்கள் இந்த காலகட்டத்தில் குழந்தை பேறுக்கு திட்டமிட வேண்டும் என்றால் அதற்கு முன் உங்கள் பிறந்த சாதக பலனைப் பார்க்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்து ஏற்கனவே கருவுற்றிருந்தால், பயணம் செய்வதை தவிர்த்துவிட்டு போதிய ஓய்வு எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic