2023 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


2023 புத்தாண்டு பலன்கள் – மீன ராசி (Pisces Moon Sign).
இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சோதனையாக இருக்கலாம். உங்களுக்கு பல பிரச்சனைகள், தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் ஏற்படலாம். சனி பெயர்ச்சி ஜனவரி 16, 2023 அன்று ஏற்படுவது உங்களுக்கு மற்றுமொரு சாதகமற்ற செய்தியாக இருக்கும். அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு ஏழரை சனி காலம் இருக்கும்,



இந்த புத்தாண்டின் உங்களுக்கு எதிரான சதிகள் மற்றும் சூழ்ச்சிகள் மூலமாக பல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் மீது பலர் பொறாமைப் படுவார்கள் மேலும் உங்கள் மீது கண் திருஷ்டியும் இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 மாதங்களில் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம். ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் எந்த விதமான முதலீடுகளும் செய்வதை தவிர்க்க வேண்டும்.
குரு ஏப்ரல் 21, 2023 அன்று பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரை உங்களுக்கு சிறப்பான வளர்சிகள் இருக்கும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்ய உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம்.




உங்களுக்கு எப்போது நேரம் சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு அதனை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூச்சு பயிற்சி செய்து மற்றும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்பதால் உங்களுக்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic