![]() | 2023 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | இரண்டாம் பாகம் |
ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் (25 / 100)
நீங்கள் ஜென்ம குருவின் தாக்கத்தை அதிகம் உணருவீர்கள். இப்போது உங்களுக்கு ஏழரை சனியின் ஏழரை ஆண்டு காலமும் தொடங்கி விட்டது. முக்கிய கிரகங்களான சனி பகவான், குரு, ராகு மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், இந்த பாகத்தில் உங்களுக்கு ஏமாற்றங்களும் மற்றும் தோல்விகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாகத்தில் விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்க வாய்ப்பு இல்லை. உங்கள் கட்டுபாட்டை மீறி போகலாம். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கடுமையான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிய வாய்ப்பு உள்ளது. காதலர்கள் இந்த பாகத்தில் பிரிவால் அதிக வலி மிகுந்தா காலகட்டத்தை சந்திப்பார்கள். உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
அலுவலகத்தில் உங்குக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இழக்க நேரலாம். ப்ராஜெக்ட் தோல்வி அடைந்தாள் அதற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மேலாளர் அல்லது உடன் வேலை பார்க்கும் ஊழியர்களால் நீங்கள் அவமானப்படும் சூழல் ஏறப்டலாம் மேலும் நீங்கள் அவர்களால் சில இன்னல்களையும் சந்திக்க நேரலாம். அலுவலகத்தில் உங்கள் நிலை மிகவும் மோசமாவதால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை விட்டுவிடவும் நினைப்ப்பீர்கள். தொழில்முனைவோர்கள் கடுமையான நிதி இழப்பை சந்திப்பார்கள். மேலும் மோசமான சூழலில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் நிலையும் ஏற்படலாம்.
பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் பிற ரிஸ்க் நிறைந்த நிதி சார்ந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் இந்த பாகத்தில் இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களை இழக்கும் சூழலும் ஏற்படலாம். உங்களுக்கு ஏதேனும் சட்ட பிரச்சனைகள் இருந்தால், அது சார்ந்து உங்களுக்கு இருக்கும் நற்பெயர் பாதிக்கும் சூழலும் உங்களுக்கு ஏற்படலாம்.
Prev Topic
Next Topic