2023 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 04, 2023 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் (80 / 100)


வாழ்த்துகள்! நீங்கள் ஜென்ம குருவை கடந்து விட்டீர்கள். ராகு அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியிலும் மற்றும் கேது சுவாதி நட்சத்திரத்திலும் ஜூன் 28, 2023 வரை சஞ்சரிப்பார்கள். அதன் பின்னர் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் கும்ப ராசியில் ஜூன் 17, 2023 அன்று வக்கிர கதி அடைவார். இதனால் உங்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிவீர்கள். மேலும் உங்குக்கு சரியான சிகிச்சை கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். உங்கள் சக்தியின் அளவும் அதிகரிக்கும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவிணர்களுடன் இருக்கும் பிரச்சனைகளுக்கு இந்த பாகத்தில் நல்ல தீர்வைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். உங்கள் வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக இருக்கும் மேலாளர் உங்களுக்கு கிடைப்பார். உங்களது கடின உழைப்பிற்கான அங்கிகாரம் உங்களுக்கு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்யவும் வேலை மாற்றம் செய்யவும் இது நல்ல நேரம். தொழில்முனைவோர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் நல்ல மாற்றத்தையும் இந்த பாகத்தில் பெறுவார்கள்.


உங்கள் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நீங்கள் உங்கள் கடன்களை விரைவாக அடைத்துவிடுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வர உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்க இது நல்ல நேரம். பங்குச்சந்தை வர்த்தகம் ஜூன் 17, 2023 முதல் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது நல்ல நேரம்.


Prev Topic

Next Topic