2023 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

வேலை / உத்தியோகம்


இந்த புத்தாண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்சிப்பீர்கள். உங்கள் மேலாளரால் நீங்கள் இன்னல்களை சந்திக்க நேரலாம். யாரைப் பற்றியும் புகார் கூறுவதை தவிர்த்துவிடுங்கள், அதுவே உங்களுக்கு இருக்கும் நிலையை மேலும் மோசமாக்கிவிடலாம். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். மறைமுக எதிரிகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 ஆகிய மாதங்களில் நீங்கள் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரலாம்.
அலுவலகத்தில் உங்களுடன் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் உங்களை விட வயது குறைந்தவர்களிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் மேலாளரால் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம். நீங்கள் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் அதிக நெருங்கிய நட்புடன் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் பாதித்துவிடலாம். நீங்கள் ஜனவரி 1, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரையிலான காலகட்டத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இழக்க நேரலாம். மேலும் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.


குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏழரை சனியின் தாக்கத்தை குறைப்பார். ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் நல்ல வெற்றியையும் மற்றும் சிறப்பான வேலை வாய்ப்பையும் பெறுவீர்கள். நீங்கள் புது வேலைக்கு முயற்சிக்கவும் இது நல்ல நேரமாக இருக்கும். மேலும் நீங்கள் ஒரு சிறப்பான வேலை வாய்ப்பையும் பெறுவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வுக்கு காத்திருந்தால், அது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செப்டம்பர் 4, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை நீங்கள் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic