![]() | 2023 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
நீங்கள் சோதனை காலத்தின் இறுதி பாகத்தில் இருப்பதால் இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இல்லாமல் போகலாம். 2023 இன் முதல் சில வாரங்கள் உங்கள் வாழ்க்கையில் சவால் நிறைந்த காலமாக இருக்கலாம். நீங்கள் பயணம் அல்லது உத்தியோகம் சார்ந்த இடமாற்றம் போன்ற காரணங்களால் தற்காலிகமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருக்க நேரலாம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடினமான நேரத்தை ஏற்படுத்துவார்கள். சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் உங்களுக்கு அதிக சவால்கள் ஏற்படலாம்.
ஆனால் ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை விடயங்களில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். குழந்தை காவல், ஜீவனாம்சம் அல்லது விவாகரத்து போன்ற நிலுவையில் இருக்கும் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற முயற்சி செய்யுங்கள்.
ஏப்ரல் 21, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுவதால் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்தும் முயற்சிகளில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயருவீர்கள்.
செப்டம்பர் 4, 2023 முதல் நவம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். அனால் நவம்பர் 4, 2023 க்கு பிறகு உங்கள் சக்தியின் அளவை நீங்கள் மீண்டும் விரைவாகப் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.
Prev Topic
Next Topic